ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD

கனடா சைவசித்தாந்த பீடம்

www.knowingourroots.com

 

வேதங்களில் பலி கொடுத்து வேள்வி செய்து வழிபடும் முறைகள் கூறப்பட்டிருப்பினும் ஆகமங்களிலும் சில இடங்களிலே இவ்விதமான வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

 

உ-ம் 1

ஸாமுத்ரம் ப்ருங்கராஜாய

மத்ஸ்யம்மத்ஸ்யோதநம் ம்ருகே, தத்யாத்

 

பிருங்கராஜனுக்கு சமுத்திரத்து மீனையும், மிருகர்க்கு மீனோடு கூடிய அன்னத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

  • காமிக கமம்

 

உ-ம் 2

ருத்ராயமாம்ஸமந்நம்ஸ்யாத்

ஆபாயமத்ஸ்யம்மாம்ஸஞ்ச சாபவத்ஸாயதாபவேத்

 

உருத்திரனுக்கு மாமிசமும் அன்னமுமாம். ஆபருக்கு மீனையும், ஆபவற்சருக்கு மாமிசத்தையுஞ் சமர்ப்பிக்க வேண்டும்.

  • காமிக கமம்

 

 

உ-ம் 3

க்ருத்மாம்ஸஞ்சரக்யைச சூலஸ்தாயைசிவாச்ரிதா;

சிவனைச் சார்ந்தவர்கள் சூலத்திலுள்ள சரகிக்காக நெய்யையும், மாமிசத்தையுங் கொடுத்தல் வேண்டும்.

  • காமிக கமம்

 

உ-ம் 4

மாம்ஸாந்நம்ஸ்யாத் க்ருஹேஷு

வீடுகளில் மாமிச அன்னம் ஆம்.

  • காமிக கமம்

 

உ-ம் 5

அஷ்டாநாம்பாஹ்யதேவாநாம் மாம்ஸாந்நம்பலிருச்யதே

பாகிய தேவதைகளாகிய எண்மருக்கும் மாமிச அன்னம் பலியாகத் பகரப்படுகின்றது.

  • காமிக கமம்

 

உ-ம் 6

ஹவிஷ்யம்தேவபவநே மாம்ஸாந்நம் ராஜமந்திரே

மத்யம்சூத்ரக்ருஹேப்ரோக்த மத்யத்ரமதுகல்பயேத்

 

தேவக்கிருகத்தில் அவிசும், இராசக் கிருகத்தில் மாமிச அன்னமும், சூத்திரக்கிருகத்திற் கள்ளுங் கொடுக்கும்படி கூறப்பட்டது. ஏனையிடத்திலே தேன் சேர்த்துக் கொள்ளலாம்

  • காமிக கமம்