திருப்பள்ளியெழுச்சி The Sacred Wake up Songs – Thiru PaLLli Ezhuchchi

திருப்பள்ளியெழுச்சி
The Sacred Wake up Songs – Thiru PaLLli Ezhuchchi
From Thiru Vaasakam- The Sacred Utterances-By Sain. MaaNikka Vaasakar
Format: R. Lambotharan MD
Saiva Siddhanta Peedam, Canada
www.knowingourroots.com

Wake up songs are sung in the very early morning before the sunrise during the month of Markazhi (மார்கழி),from mid December to mid January. This is the beginning of the New Year – beginning of the day for Gods. This is the call for the new beginning, call for the new energy, call for the fresh start and call for the moral, material and spiritual uplift. This is the call to awake every being, year after year to experience and express afresh, inherent divine nature. This is the call to make manifest the eternal truth within, the eternal love within and to subdue the evil forces within. This is the call for true freedom for which we are all entitled to, wherever we are, whatever the state we are in now.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய் எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

pōttiyeṉ vāzhmuthal ākiya poruLē!
pularnthathu pūngkazhatku iNṇai thuNai malar koNdu
ēttṟi niṉ thirumukaththu emak karuL malarum
ezhil nakai koNdu niṉ thiruvadi thozhukōm
cēttithazhk kamalangkaL malarum thaN vayal cūzh
thirup perun thuRai yuRai siva peru māṉē!
ēttuyar kodiyudai yāy eṉai udaiyāy
emperu māṉ paLLi ezhuntharu Lāyē.

O supreme Ens which is the source of my life, praise be !
It has dawned; we will hail Your flowery, ankleted
Feet twain with a pair of flowers matching them.
Blessed with the gracious and beautiful smile
That burgeons in Your visage, we will adore Your sacred feet.
O God Siva! who abides at sacred Perunthurai girt
With cool fields where, from the mire, petalled lotuses
Blossom, O One that has a flag inscribed!
With a signum of the Bull; You own us. O our God be pleased!
To arise from off Your couch and grace us.

அருணன் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலர மற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!
அலைகட லே!பள்ளி எழுந்தரு ளாயே.

aruNaṉ inthiraṉ thisai aNukiṉaṉ iruL pōy
akaṉRathu; uthayam niṉ malarth thiru mukaththiṉ
karuNaiyiṉ sūriyaṉ ezha ezha nayaṉak
kadimalar malara mat taNNalang kaNNām
thiraL nirai aRupatham muralvaṉa ivaiyōr
thirupperun thuRaiyuRai sivaperu māṉē!
aruL nithi thara varum āṉantha malaiyē!
alai kadalē! paLLi ezhuntharu ḷāyē.

O God Siva abiding at sacred Perunthurai !
O Mount Of Bliss that comes to us to confer on us the Wealth Of Grace !
O One like the billowy sea !
AruNan – The charioteer of Sun –,has reached the East – The quarter of Indira.
Murk has fled away.
The rays of dawn are pervading.
Like mercy Manifesting in Your flowery and merciful face,
As the sun rises up and up,
Fragrant lotuses like unto Your eyes, burgeon the six-footed bees,
In swarms and in rows, thither Bombinate.
Take cognizance of these and
Be Pleased to arise from off Your couch and grace us.

கூவின பூங்குயில; கூவின கோழி;
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்;
ஓவின தாரகை; ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கு எளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

kūviṉa pūngkuyil kūviṉa kōzhi
kurukukaL iyampiṉa iyampiṉa cangkam
ōviṉa thārakai oLioLi uthayaththu
oruppadu kiṉRathu viruppodu namakkuth
thēva nat ceRi kazhaL thāLiNai kāddāy
thirupperun thuRaiyuRai sivaperu māṉē!
yāvarum aRivari yāy emak keLiyāy
emperu māṉ paLLi ezhuntharu Lāyē.

Comely kuyils have piped their notes;
The chanticleers Have crowed;
Other birds have loud twittered;
Shells have blared;
The light of stars has faded.
Dawn`s radiance spreads.
Deign to make Manifest, in love,
Your divine and goodly feet Twain,
Fastened to anklets.
O God Siva Who abides at sacred Perunthurai !
O Lord Hard to know by all others,
But easy of access to us,
Be pleased to arise from off Your couch And grace us.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

iṉṉisai vīNaiyar yāzhiṉar orupāl
irukkodu thōththiram iyampiṉar orupāl
thuṉṉiya piNaimalark kaiyiṉar orupāl
thozhu kaiyar azhukaiyar thuvaL kaiyar orupāl
cheṉṉiyil añchali kūppiṉar orupāl
thirupperun thuRaiyuRai sivaperu māṉē!
eṉṉaiyum āNdukoNdu iṇṉaruL puriyum
emperu māṉ paLLi ezhuntharu Lāyē.

Player of sweet-voiced Veena on one side;
Strummers Of Yaazh on one side;
Reciters of Vedas and praying devotees on one side;
The holders Of densely-woven flower-wreaths in their hands, On one side;
Adorers, weeping devotees and those That wilt, on one side;
Those that joined their hands Over their heads, in worship, on one side;
It is thus The devotees had foregathered.
O Lord Siva abiding at sacred Perunturai !
O our God who redeemed even me and grants me Sweet grace,
Be pleased to arise from off Your couch And grace us.

பூதங்கள் தோறும்நின் றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

pūthangkaL thōRum niṉRāy eṉiṉ allāl
pōkkilaṉ varavilaṉ eṉa niṉaip pulavōr
kīthangkaL pāduthal āduthal allāl
kēddaRiyōm uṉaik kaNdaRi vāraich
cīthangkoL vayal thirup perunthuRai maṉṉā!
cinthaṉaikkum ariyāy engkaḷ muṉvanthu
ēthangkaL aRuththu emmai āṇdaruL puriyum
emperu māṉpaLLi ezuḻuntaru Lāyē.

Wise men affirming that You abide in all the elements,
Ever-free from death and birth,
Sing hymns And dance.
Yet we have not even known by hearsay Of those that have seen and known You.
O king of sacred Perunturai rich in cool fields !
O One beyond thought ! O our God,
You manifest Before us, do away with our flaws,
Redeem us And grant us grace.
Be pleased to arise From off Your couch and grace us.

பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார்அணங்கின் மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

pappaRa vīddirunthu uNarum niṉ adiyār
panthaNai vanthaRut thār avar palarum
maippuRu kaNNiyar māṉudath thiyalpiṉ
vaNangkukiṉRār aNang kiṉ maNa vāLā
cheppuRu kamalangkaL malarum thaN vayal chūḻ
thirupperun thuRaiyuRai Sivaperu māṉē!
ippiRappu aRuththu emai āNdaruL puriyum
emperu māṉpaLLi ezhuntharu Lāyē.

Your devotees, rid of their rambling and poised in Deliverance,
Sought You and did away with Their bondage.
All of them adore You in the human way,
As is done by the chaste women whose eyes are Touched with khol
And who adore their respective husbands.
O Consort of Goddess Uma !
O Lord Siva abiding In sacred Perunthurai girt with cool fields Whence the cup-shaped lotuses burgeon !
O Our God, Annul our present embodiment and rule us.
May you be pleased to arise from off Your couch And grace us.

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு; இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

athu pazhach chuvai yeṉa amutheṉa aRithatku
aritheṉa eLitheṉa amararum aRiyār
ithu avaṉ thiruvuru, ivaṉ avaṉ eṉavē
engkLḷai āNdukoNdu ingku ezhuntharuLum
mathu vaLar pozhil thiru uththara kōsa
mangkaiyuL Lāy thirup perunthuRai maṉṉā!
ethu emaip paNikoLu māRu athu kēdpōm
emperu māṉ paLLi ezhuntharu Lāyē.

THAT is the taste of fruitage; THAT is Nectar;
It is Impossible to know THAT; THAT is easy of access.
Thus wrangling the immortals know Him not.
This is His sacred form; This indeed is He.
That God indeed is He – come in the human form.
Thus are we blessed to speak of Him who, ruling us,
Has deigned to come down here,
The One that abides at Uththarakōsamangkai Girt with melliferous groves.
O King of the sacred Perunturai rich in melliferous groves.
What indeed Is the way to serve You?
We will pursue that. O our God !
Be pleased to arise from off Your couch and bless us.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே.

munthiya muthal nadu iRuthiyum āṉāy
mūvarum aRikilar yāvar mattu aRivār
panthaNai viraliyum nīyum niṉ adiyār
pazhangkudil thoṟum ezhun tharuLiya paraṉē
chenthazhal purai thiru mēṉiyum kāddi
thirupperun thuRaiyuRai kōyilung kāddi
anthaNan āvathung kāddi vanthu āNdāy
āramuthē paLLi ezhuntharu Lāyē.

You are the pre-primordial First, the Midst and the Last,
Unknown to the Trinity; Who else can know You?
O supreme Ens ! With Her whose fingers sport a ball,
You deigned to visit each old dwelling of Your Servitors.
You revealed to us
Your sacred body – Like unto ruddy fire,
The temple at the sacred Perunturai where You abide and
Your form As a Brahmin,
And redeemed us. O Nectar rare!
Be pleased to arise from off Your couch and grace us.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே உன தொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய் வழி யடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.

viNNakath thēvarum naNNavum māddā
vizhup poruLē uṉa thozhppadi yōngkaL
maNNakathē vanthu vāzhach ceythāṉē
vaN thirup perunthuRai yāy vazhi yadiyōm
kaNNakaththē niṉRu kaLi tharu thēṉē
kadal amuthē karumpē virum padiyār
eNNakaththāy ulakukku uyir āṉāy
emperu māṉ paLLi ezhuntharu Lāyē.

O supreme Ens ever inaccessible to even the heavenly Devas !
You caused us – the hereditary slaves that serve You –,
To dwell on earth.
O Lord of uberous and sacred Perunturai !
You abide in our eyes and confer On us,
Delight sweet as honey ! O Nectar of the ocean ! O Sweet cane !
O One that abides in the thought Of loving devotees ! O Life of the cosmos !
O our God !
Be pleased to arise from off Your couch and grace us.

புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய் திரு மாலாம்
அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே.

puvaṉiyit pōyp piRavāmaiyil, nāL nām
pōkkukiṉ Rōm avamē, inthap pūmi
sivaṉ uyyak koLkiṉRa vāṟu eṉRu nōkki
thiruppeRun thuRaiyuRai vāy thiru mālām
avaṉ viruppeythavum malaravaṉ āsaip
padavum niṉ alarntha meyk karuNaiyum nīyum
avaṉiyit pukunthu emai ādkoLLa vallāy
āramuthē paLLi ezhuntharu Lāyē.

Coming to know that Earth is the place designed by Siva for grant of redemption,
and feeling That without securing such birth on earth They were wasting their lives,
both Sri Vishnu And Brahma foster love and longing for such Birth.
O Lord that abides at sacred Perunthurai !
You and Your Consort Who is Mercy true which burgeons,
Are valiant to come down on earth to redeem And rule us.
O Rare Nectar !
Be pleased To arise from off Your couch and grace us.

TRANSLATION BY T.N. RAMACHANDRAN