மந்திரசெபத்தின்_வகைகளும்_பலன்களின்_ஏற்றக்குறைவும் – மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 05

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 05
#பீஜம்_மந்திரம்_கீலகம்
#மந்திரசெபத்தின்_வகைகளும்_பலன்களின்_ஏற்றக்குறைவும்

192. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?
ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.
மந்திரசெபத்தின் வகைகள்….link…
https://m.facebook.com/story.php?story_fbid=201083479701234&id=100093987489378&mibextid=Nif5oz

விளக்கக் குறிப்பு 1.
“முற்றும் ஒலியின் முதிர்ந்தபலம் மந்தஒலி
மற்றை மனம்மேலாம் வரம். “
சத்தமாகச் செபித்தலிலும் அதிகமான பலம் மந்தமாகச் செபித்தலுக்கு உண்டு. மானத செபமே எல்லாவற்றிலும் மேலான பலம் தருவது.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 155

விளக்கக் குறிப்பு 2.
எந்த ஒரு மந்திரத்துக்கும் #பீஜம், #மந்திரம், #கீலகம் என மூன்று #பாகங்கள் உள்ளன.
#பீஜம் என்றால் #வித்து என்றும் #வேர் என்றும் பொருள். ஓம் என்பது பிரணவ பீஜம்; ஹாம், ஹௌம் போன்றவை சிவ பீஜங்கள்; ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம் போன்றவை சக்தி பீஜங்கள்; கம் என்பது கணபதி பீஜம்; ஐம், க்லீம், சௌம் என்பன முருக பீஜங்கள்; லம் என்பது பிருதிவி பீஜம்; யம் என்பது வாயு பீஜம், ரம் என்பது அக்னி பீஜம்; வம் என்பது வருண பீஜம்; இவ்வாறாக பல பீஜங்கள் உள்ளன. மந்திரத்தை குருவிடம் முறைப்படி அதற்குரிய பீஜத்துடன் பெற்று செபிப்பது வித்து முளைத்து வேரோடுவதுபோல எம் அகத்தே ஊடுருவி மிக்க பயன் தரும்.
#கீலகம் என்பது மந்திரத்தின் #பூட்டு அல்லது பூடகம் ஆகும். விதிப்படி தீட்சை பெற்றவர்கள் தமது நித்திய அனுட்டானத்தில் மந்திர உச்சாடனத்துடன் செய்யும் #நியாசம் என்னும் தொடுமிடம் தொடுதல் கீலகம் ஆகும். நியாசத்துடன் கூடிய செபத்தினால் கீலகம் என்னும் அதன் பூட்டுத் திறபட்டு பூடகமான ரகசிய அர்த்தங்கள் புலனாகி அதிக பயன் தரும்.

விளக்கக் குறிப்பு 3.
#பீஜ_மந்திரங்கள்:
”ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்”
ஐம், க்லீம், சௌம் என்பன முருகனுக்குரிய பீஜ மந்திரங்கள்;
ஹாம், ஹௌம் என்பன சிவனுக்குரிய பீஜ மந்திரங்கள்;
ஹ்ரீம், ஸ்ரீம் என்பன அம்பாளுக்குரிய பீஜ மந்திரங்கள்.
– தேவராய சுவாமிகள் அருளிய கந்த சட்டி கவசம்

விளக்கக்குறிப்பு 4.
வீட்டில் ஒரு சுற்று செபித்தால் அது ஒரு உரு செபித்த பலனாகும்; அதையே பசுக்கொட்டகையில் இருந்து செபித்தால் நூறு உரு செபித்த பலனாகும்; திருநந்தவனத்தில் இருந்து செபித்தால் ஆயிரம் உரு செபித்த பலனாகும்; பருவதம் அல்லது குன்றின் மேல் இருந்து செபித்தால் பதினாயிரம் உரு செபித்த பலனாகும்; நதிக்கரையில் இருந்து செபித்தால் இலட்சம் உரு செபித்த பலானாகும்; சிவாலயத்தில் இருந்து செபித்தால் கோடி உரு செபித்த பலனாகும்; சிவ சந்நிதியில் பலிபீடத்தின் பக்கத்தில் இருந்து செபித்தால் அனந்த உரு செபித்த பலனாகும்.
– சிதம்பரம் கண்கட்டிமடம் மறைஞானசம்பந்தர் அருளிய உருத்திராக்க விசிட்டம்.

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).