யாரெல்லாம் பஞ்சாட்ஷர ஜெபம் செய்யலாம்? விதிகளும் விதிவிலக்குகளும் -மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 08

யாரெல்லாம் பஞ்சாட்ஷர ஜெபம் செய்யலாம்?
#விதிகளும்_விதிவிலக்குகளும்.
மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 08

176. ஸ்ரீபஞ்சாட்சர செபம் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீட்சை பெற்றவராய் உள்ளவர்.

விளக்கக் குறிப்பு: 1.
மச்ச மாமிசம் புசிப்பவர்க்குப் பிரணவம் கூடாது. சிகராதி பஞ்சாட்சரம் கூடாது. அவர் நகராதி பஞ்சாட்சரம் பிரணவம் கூட்டாது உச்சரிக்கக் கடவர். – ஆறுமுக நாவலரின் நித்திய கரும விதி.

பாலரொடு வாலீசர் விருத்தர் பனி மொழியார்
பல போகத்தவர் வியாதிப்பட்டவர்க்குப் பண்ணும்
சீலமது நிர்ப்பீசம்; சமயாசாரம்
திகழ் சுத்தி சமயி புத்திரர்க்கு நித்தத்(து)
ஏலு மதிகாரத்தை இயற்றித்தானும்
எழில் நிரதிகாரை யென நின்றிரண்டாய் விளங்கும்
சால நிகழ் தேக பாதத்தினோடு
சத்திய நிர்வாண மெனச்சாற்றுங் காலே.
– சிவஞானசித்தியார்

நிர்பீஜா-தீக்ஷா, பீஜ மந்திரம் இல்லாத தீட்சை குழந்தைகளுக்கு, மிகவும் சிறியவர்களுக்கு , மிகவும் வயதானவர்களுக்கு, மற்றும் நோயாளிகள், பெண்களுக்கு (வீட்டுப் பொறுப்புகளுடன்) கொடுக்கப்படலாம்.

விளக்கக் குறிப்பு: 2.
அவரவருக்கு அவரவரின் குரு சொன்ன படி பஞ்சாட்சர மந்திரத்தை செபிக்கலாம். விதிகளைச் சொன்ன ஆறுமுக நாவலர் அவர்கள் விதிவிலக்கையும் சுட்டிக்காட்டி மச்ச மாமிசம் உண்பவர்கள் கூட இவ்வாறு பீஜ மந்திரம் இல்லாத தூல மந்திரமாகிய நமசிவாய மந்திரத்தை செபிக்கலாம் என்று கூறியுள்ளார்.

விளக்கக் குறிப்பு: 3.
நமசிவாய என்னும் தூல பஞ்சாட்சரம் ஓதுவதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. இதனை தீட்சை பெறாதவர்களும் ஏனையோரும் எவ்வித தயக்கமும் இன்றி எந்நேரமும் ஓதலாம். குரு மூலமாக பஞ்சாட்சரத்தைப் பெற்று ஓதினால் அது #மந்திர_செபம் ஆகும். அவ்வாறில்லாது தாமாகவே சுயமாக நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓதினால் அது #நாம_செபம் ஆகும். மந்திர செபத்துக்குரிய நியமங்களும், கட்டுப்பாடுகளும் நாம செபத்துக்கு இல்லை.

……..நாதன் நாமம் நமச்சி வாயவே.
………நம்பன் நாமம் நமச்சி வாயவே.
……….நக்கன் நாமம் நமச்சி வாயவே.
…………………………………………………………………………………….நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.
……….நல்லார் நாமம் நமச்சி வாயவே.
———-நந்தி நாமம் நமச்சி வாயவே.
……………….வரதன் நாமம் நமச்சி வாயவே.
…………….நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
………………ஓதும் நாமம் நமச்சி வாயவே.
…………….நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

கொல்வா ரேனும் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.
நந்தி நாமம் நமச்சிவா யஎனும்
சந்தை யால்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந்து ஏத்தவல் லார்எலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
– 3ம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்

ஏது மொன்றும் அறிவிலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற் பேறரே
– 5ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்
கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேன்அன்றே.
– 5ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

….நற்றவா உனை நான் மறப்பினும்
சொல்லு நா நமச்சி வாயவே.
– 7ம் திருமுறை, சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம்
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).